Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருக்காத்தம்மன் கோவிலில் ... கோவை ஈஷாவில் மாணிக்கவாசகர் விழா; பக்தர்கள் பரவசம் கோவை ஈஷாவில் மாணிக்கவாசகர் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊத்துக்காடு திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விழா
எழுத்தின் அளவு:
ஊத்துக்காடு திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விழா

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2025
12:07

வாலாஜாபாத்; ஊத்துக்காடு, திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற பாசுபத அஸ்திரம் வேண்டி அர்ச்சுனன தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி தெருக்கூத்து கலைஞர்களால் நேற்று முன்தினம் நடந்தது. விரதம் இருந்த நாடக கலைஞர் அர்ச்சுனன் வேடம் அணிந்து 50 அடி உயர தபசு மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் படியபடி ஏறினார். அப்போது தபசு மரத்தின் கீழே பெண்கள் பலர் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் தடை நீங்கவும் பிரார்த்தனை செய்தனர். மரத்தின் உச்சியில் நின்று வீசப்பட்ட எலுமிச்சை பழம் மற்றும் பூக்கள் உள்ளிட்டவைகளை பெண்கள் ஆர்வத்தோடு தேடி எடுத்து சென்றனர். விழாவின் நிறைவாக வரும் 6ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar