காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்ட உண்டியலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை காலை முதல் மாலை வரை கணக்கிடும் பணியில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர் . கடந்த 22 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணமாக ஒரு கோடியே அறுபத்து எட்டு லட்சத்து பதினெட்டு ஆயிரத்து எழுநூற்று ஐந்து ரூபாய் மற்றும் தங்கம் 52 கிராம், வெள்ளி ஒரு கிலோ 4 கிராம் இருந்தது. இந்த உண்டியல் பணம் கணக்கிடும் பணியில் கோயில் துணை செயல் அதிகாரி சாகர் பாபு, சித்தூர் உதவி ஆணையர் சிட்டியம்மா, கோயில் துணை செயல் அதிகாரிகள் எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திர பாபு, ஹரிமாதவ ரெட்டி, தனஞ்சய, பிரசாத், தனபால், மற்றும் அதிகாரி நாகேஸ்வர ராவ், மேற்பார்வையாளர்கள் - கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, கோயில் ஊழியர்கள், யூனியன் வங்கி காணிப் பாக்கம் கிளை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.