திருப்பரங்குன்றம் கோயில் ராஜகோபுரத்தில் இரும்பு சாரம் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2025 05:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக ராஜ கோபுரத்தில் இரும்பு சாரம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.அன்று காலை யாக சாலையில் வைத்த பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் ராஜகோபுரத்தின் மேல் சென்று கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்காக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானங்களில் இரும்பு சாரம் அமைக்கப்படுகிறது. வழக்கமாக மூங்கில் சாரம் அமைக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு இரும்பு சாரம் அமைக்கப்படுகிறது.