சங்கராபுரம்; செம்பராம்பட்டு அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு அய்யனார், வீரனார், வீராயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் அய்யனார், வீரனார், வீராயி சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து நேற்று ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.