கோவை கோதண்டராமர் கோவிலில் சாதுர்மாஸ்ய விரத மஹோத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2025 05:07
கோவை; ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நாளை முதல் செப்., 07ம் தேதி வரை நடைபெறுகிறது இதற்காக பிலாஸ்பூர் மாநிலம் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடத்தின் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் ராமர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முதல் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு சுவாமிகள் வழங்குகிறார். இந்த நிகழ்வானது செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாளில் சுவாமிகள் அன்றைய தினம் திருவீதி உலா வருகிறார்.இந்த நிகழ்வின் போது தினசரி நிகழ்வாக இசை கச்சேரி நடைபெறுகிறது.