திருப்பதியில் வியாச பூஜையுடன் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய காஞ்சி மடாதிபதிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 12:07
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் குரு பூர்ணிமாவில் விஸ்வவசு சம்வத்ஸரம் வியாச பூஜை செய்தனர்.
காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரஸேகரேந்த்ர சரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் திருப்பதியில், அலிபிரி, ஸ்ரீமஹாபாதுகா மண்டபத்தில் இன்று சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினர். குரு பூர்ணிமாவான இன்று முதலாக விஸ்வவசு சம்வத்ஸரம் வியாச பூஜையை சுவாமிகள் செய்தனர். வியாச பூஜையுடன் துவங்கிய விழாவானது செப்டம்பர்-07ம் தேதி பாத்ரபத பூர்ணிமையன்று விஸ்வரூப யாத்ரையுடன் நிறைவு பெறுகிறது. பவித்ரமான இந்த தருணத்தில் அத்யயன தினங்களில் காலை ஸ்ரீமத் ஸங்கர பாஷ்ய பாடமும் நடக்கும். மேலும் அந்தந்த தருணங்களில் சதுர்வேத பாராயணம், அக்னிஹோத்ர ஸதஸ், பஞ்சாங்க ஸதஸ், பலவித மாஸ்த்ர ஸதஸ்ஸுகள், வேத பாஷ்ய ஸதஸ், அத்வைத வேதாந்த ஸதஸ், உபந்யாஸங்கள், பக்தர் குழாம்களின் சிறப்பு பிக்ஷாவந்தனங்கள் மற்றும் ஸங்கீத வாத்ய நாமஸங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இப்புண்ணிய காலத்தில் சிறந்த விரதத்தைக் கடைபிடிக்கும் தவசீலர்களான ஆசார்யர்களை தரிசித்து வணங்கி தொண்டு புரிவதால் பக்தர்களுக்கு மிகுந்த நன்மை உண்டு என்பதில் ஐயமில்லை.