சிருங்கேரி சாரதா பீடத்தில் வியாச பூர்ணிமா; சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய மகா சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 01:07
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானத்துடன் சிருங்கேரியில் துவங்கினார்.
ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது சிருங்கேரி சாரதா பீடம். சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம் உள்ளார். சன்னியாசிகள் வாழ்வில் இரண்டு மாத கால சாதுர்மாஸ்ய விரதம் என்பது மிக முக்கியமானது. இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு சாதுர்மாஸ்ய சங்கல்பத்துடன் விரதம் துவங்கியது. விழாவில் சிருங்கேரி பீடத்தில் சிவ ஷயனோத்ஸவ, கோகிலாவ்ரதம், குருபூர்ணிமா, லட்சமல்லிகோத்யபனே, லலிதா ஹோமம் நடைபெற்றது. விழாவானது செப்., 7ல் நிறைவு பெறுகிறது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமிஜி அவர்களால் நியமிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டபடி, புராணங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளில் பன்மொழி சொற்பொழிவுகள் ஒவ்வொரு மாலையும் மாலை 7 மணிக்கு சாதுர்மாஸ்யம் முழுவதும் நடைபெற உள்ளது.