திருவண்ணாமலையில் தினமும், ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமி திதி நாளை(10ம் தேதி) அதிகாலை, 2:36 மணி முதல், நாளை மறுநாள், 11ம் தேதி அதிகாலை, 3:11 மணி வரை உள்ளது. இதனால் பவுர்ணமி முன்னிட்டு, நள்ளிரவு தொடங்கிய இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இரட்டைப் பிள்ளையார் கோவில் பகுதியில், 6 மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கோவிலில், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.