Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... சிருங்கேரி சாரதா பீடத்தில் வியாச பூர்ணிமா; சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய மகா சுவாமிகள் சிருங்கேரி சாரதா பீடத்தில் வியாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்; மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்; மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2025
12:07

காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து மாங்கனிகளை வீசி சாமி தரிசனம் செய்தனர்.


சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. பழங்காலத்தில் சிவபக்தியான புனிதவதியாரை மணந்த பரமதத்தர் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியார் வேடத்தில் வீட்டிற்கு வந்த சிவபெருமானுக்கு புனிதவதியார் உணவுடன் சேர்த்து படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவருக்கு மீதமிருந்த மாங்கனி ஒன்றை வழங்க அதன் சுவை அதிகமாக இருந்தால் மற்றொரு பழத்தை கேட்க செய்வதறியாது திகைத்த அம்மையார் இறைவனை வேண்டியதால் கையில் மாங்கனி கிடைத்தது அதை கணவரிடம் வழங்கினார். முன்பு சாப்பிட்ட பழத்தின் சுவையை விட அதிகமாக இருந்ததால் பழம் குறித்து பரமதத்தர் விபரம் கேட்டார். அப்போது சிவபெருமாள் வழங்கியது என கூற அதை ஏற்க மறுத்த பரதத்தர் மீண்டும் ஒரு பழம் வரவழைத்து கொடு என கேட்டார். அப்போது கணவன் முன் இறைவனை வேண்டி மீண்டும் ஒரு பழத்தை பெற்று கணவனிடம் காண்பித்தார் இதை பார்த்த பரமதத்தர் புனிதவதியார் நீ தெய்வ பிறவி என்று கூறி பிரிந்து மதுரை சென்று மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். 


கணவனை காண மதுரை சென்ற புனிதவதியாரை கண்ட பரமதத்தர் தனது இரண்டாவது மனைவி மகளுடன் காலில் விழுந்து வணங்கினார். பின் கணவனுக்காக ஏந்திய உடலை வெறுத்து சிவனிடம் வேண்டி பேய் உருவம் பெற்றார் அம்மையார் பின் சிவபெருமாள் உள்ள கையிலாயத்திற்கு சென்றார். புனிதமிக்க கைலாயத்தில் தன் பாதங்கள்பட கூடாது என்பதால் தலைகீழாக கைகளால் நடந்து சிவனை அடைந்தார். அப்போது தாயும் தந்தையும் அற்ற சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அம்மையே அன்று அழைத்தாக வரலாறு இந்த வரலாற்று நிகழ்வை உணர்ந்தும் விதமாக மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. நேற்று காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது.மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது. இன்று அதிகாலை பிஷாடணமூரத்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.பின்னர் நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க மேளதாளம் முழுங்க காலை 9 மணிக்கு பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து சிவபெருமான் காவியுடைருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது அப்போது சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து பின் வீடுகளில் மாடிகளில் இருந்து பக்தர்கள் வேண்டுதலையொட்டி மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி வெகுவிமர்ச்சியாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.கள்.நாஜிம், சந்திரபிரியங்கா, நாகதியாகராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். மாங்கனி திருவிழாவில் பல்வேறு இடங்களில் 300க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar