விக்கிரவாண்டி பனங்காட்டீஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2025 10:07
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே பனங்காட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனையபுரத்தில், 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், 21 ஆண்டுகளுக்கு பின், அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கும்பாபிேஷக வழிபாடு துவங்குகிறது. வரும் 14ம் தேதி மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கிராம மக்கள், திருப்பணிக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.