காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் வெளிபிரகாரத்தில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தரையில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும், திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவில் பிரகாரத்தின் வடக்கு பகுதியில், பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிழக்கு, தெற்கு பக்கத்தில் பசுமை பந்தல் அமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் தரையில் உள்ள சூடு காரணமாக பக்தர்கள் நடந்த செல்ல முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் வெளி பிரகார தரையில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.