பழநி; பழநி காந்தி ரோடு, பெரிய கடை வீதி, பட்டத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் காந்தி ரோடு பெரிய கடை வீதி பட்டத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் நடைபெற பணிகள் துவங்கின. கடந்த மே 25, அன்று கருவறை பாலாலயம் நடைபெற்றது அதன் பின் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஜூலை 12 ல் கணபதி பூஜையுடன் கலசங்கள் நிறுவி அனுமதி பெறுதல், மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன. அன்று மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது. ஜூலை 13 அன்று இரண்டாம் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், கனி,கிழங்கு மூலிகைகளுடன் நடைபெற்றது. அன்று மதியம் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. (ஜூலை 14) நேற்று அதிகாலை நான்காம் காலயாக பூஜைகள் நடைபெற்றன. அதன் பின் நேற்று அதிகாலை சுற்று சன்னதிகள், பட்டத்து விநாயகர் கோயில் மூலவர் சன்னதிக்கு செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கமிஷனர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.