அசுவினி பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது, பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது, பூர்வீக சொத்து விவகாரத்தில் அவசரப்படாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். மாதம் முழுவதும் யோகக் காரகனான ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். முடங்கி கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். எதிரிகளால் சங்கடங்கள் உண்டாகும் என்றாலும், அதை சமாளித்திடக்கூடிய நிலை உங்களுக்கு உருவாகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 3
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 25, 27, ஆக. 7, 9, 16
பரிகாரம்: விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.
பரணி
நினைத்ததை சாதிக்கும் வரை ஓய்வின்றி உழைக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும் அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் ஜூலை 27 வரை தன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வீடு, வாகனம், ஆபரணம் என்ற கனவு நனவாகும். ஆக.8 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். வாங்க நினைத்தவற்றை வாங்குவீர்கள் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 30 முதல் சத்துரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். தொழில், வியாபாரம், வேலையில் இருந்த எதிர்ப்புகள் மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். காவல் துறையினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
எந்த நேரத்திலும் தன் செல்வாக்கை இழக்காத உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பெரிய மனிதர்களுடைய தொடர்பும், ஆதரவும் ஏற்படும். குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவதுடன், குல தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வீர்கள். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். புதிய முயற்சி முன்னேற்றத்தை உண்டாக்கும். ஜூலை 30 முதல் ராசிநாதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். ஆரோக்கியம் மேம்படும். ஆக.3 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஒவ்வொன்றிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். புதிய வாகனம், நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கடன் தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விளைச்சல் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக.5
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 19, 27, 28, ஆக. 1, 9, 10.
பரிகாரம்: முருகனை வழிபட நினைத்த செயல் நடந்தேறும்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »