கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; நினைத்ததை சாதிப்பதில் முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நடந்தேறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பால் இழுபறி வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உங்கள் செல்வாக்கும், அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும், தொண்டர்களின் பலமும் உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். அரசுவழி முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். உடல் பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும்.
சந்திராஷ்டமம்: ஆக. 5, 6
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28, ஆக. 1, 10, 15.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.
ரோகிணி: தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு ஆடி மாதம் முன்னேற்றமான மாதம். வேலையில் இருந்த பிரச்னைகள், நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஊதிய உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லக்கூடிய நிலை உண்டாகும். தொழிலில் ஆதாயம் கூடும். உங்கள் திறமை வெளிப்படும். குருவின் பார்வைகள் ருணரோக, அஷ்டம, ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு வெற்றியாகும். மறைந்திருந்த உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்த்த வரவு வரும். திறமைக்கேற்ற வேலையில்லை தகுதிக்கேற்ற ஊதியமில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களின. நிலை மாறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஜூலை 25 முதல் சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடி வந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். மாதுர் ஸ்தானத்தில் கேது செவ்வாய் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஆக. 6, 7
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 24, 29. ஆக. 2, 11, 15
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: செயல்களில் வேகமும் எடுத்த வேலைகளை முடிக்கும் திறமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் இணைவதால் உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். ஜூலை 30 முதல் ஐந்தாம் இடத்திற்குச் செல்லும் செவ்வாய் எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். உங்களுக்குண்டாகும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பர். எதிரிகளால் ஏற்படும் தொல்லை, வியாபாரத்தில் உண்டாகும் போட்டி, இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை பாதிப்பு விலகும். உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்படும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். வயதானவர்களுக்கு உடல் பாதிப்பு விலகும்.
சந்திராஷ்டமம்: ஆக. 7.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27, ஆக. 6, 9, 15.
பரிகாரம்: மாரியம்மனை வழிபட மனக்கவலை நீங்கும்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »