திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை திருப்பணி செய்ய வேண்டும் என கிராம மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1 கோடியே 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 11ம்தேதி முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திருப்பணியை துவக்கி வைத்தார். நேற்று மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால பூஜை; மகாசங்கல்பம், இன்று காலை 8:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜை, அமைச்சர் கணேசன் முன்னிலையில் நடந்தது. பகல் 11:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் மகாதேவி, பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.