கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் இன்று தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடந்தது. காலையில் மூலவருக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை அடுத்து சுவாமிக்கு அலங்காரம் நடந்தது. பின்பு உற்சவர் சன்னதியில் விஸ்வக் சேனர், ஆவாஹனம், புண்யா வசனம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து கால சந்தி பூஜை, சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் ஸ்தலத்தார், அச்சகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.