கோதண்டராமர் சுவாமி கோவிலில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 11:07
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இதில் சுவாமிகள் கடந்த 9-ம் தேதி என்று கோவைக்கு விஜயம் செய்தார். தொடர்ந்து தினமும் சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்து வருகிறது. பக்தர்களை தினமும் சந்தித்து சுவாமிகள் ஆசீ வழங்கி வருகிறார்.
சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி நிகழ்த்திய உரையில் கூறியதாவது; மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் தர்மத்துடன் இருக்க வேண்டும் என்றும் அளவற்ற புண்ணியம் செய்தால் மட்டுமே மனித பிறவி கிடைக்கும் என்று பேசினார். மோட்சம் கிடைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். நமது தர்மத்தை தடையில்லாமல் காக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் . நமது வாழ்வியல் நெறிமுறைகளை மறந்து விடக்கூடாது என்று பேசினார். நாம் எங்கு சென்றாலும் நம் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். நம் நித்திய கர்மாவை விடுத்தால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. எது கிடைத்தாலும் அதை கடவுள் கொடுத்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மனித மனம் ஒரு குரங்கு. அதை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த கடவுள் என்றாலும் அந்த கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு சுவாமிகள் கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர்.நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.