ஆடி முதல் வெள்ளி; மேட்டுப்பாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 12:07
கோவை; மேட்டுப்பாளையம், ஜெகநாதன் லே-அவுட் காட்டூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தவிட்டு மாரியம்மன் திருக்கோவில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வண்ண வளையல்கலால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே தெப்பக்குளம் மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று இக்கோவிலில் மாகாளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு போன்றவைகளை ஏற்றி அம்மனை வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.