காட்டூர் விளையாட்டு மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 11:07
கோவை; காட்டூர் நாகப்பன் வீதியில் உள்ள அருள்மிகு விளையாட்டு மாரியம்மன் கோவில் 54-ம்ஆண்டு உற்சவ விழா கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் நிகழ்வாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .அதை தொடர்ந்துகோவில் வளாகம் முன்பு அக்னி கம்பம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.