கோவை; ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், ஸ்ரீ சாய் யோகலிங்க ஷேம ஆராதனை விழா, கோவை ஆர்.எஸ்.புரத்தில் விமரிசையாக நடந்தது. ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் மற்றும் ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின், 100வது ஆண்டு பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த விழாவில், மரகதலிங்கத்திற்கும், சுவாமியின் பாதுகைகளுக்கும் அபிஷேகம் செய்ய, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுவாமியின் படங்களும், பிரசாதங்களும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. மஹா அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர் கள், பகவான் சத்திய பாபாவின் அருளை பெற்றனர்.