காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில், செய்யார் அப்பர் கைங்கர்ய சபா குழுவினர் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் உள்ள அப்பர் கைங்கர்ய சபா குழுவினர், தமிழகம் முழுதும் உள்ள சிவன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சி புரம், பிள்ளையார் பாளையம், புதுப்பாளையம் தெரு தென்கோடியில், கோடி ருத்ரர்கள் வழிபட்ட ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வெளிபிரகாரம் மற்றும் உட்பிரகாரத்தில் வளர்ந்து இருந்த செடி, கொடிகளை அகற்றினர். மேலும், கூரையில் படிந்து இருந்த துாசிகளை அகற்றி கோவில் வளாகம் முழுதும் சுத்தம் செய்தனர்.