ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூரம் விழா; அம்மனுக்கு மகா தீபாரதனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. ஜூலை 19ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாணம் விழா துவங்கியது. 10ம் நாள் தவிழாவான இன்று கோயிலில் 9 மணிக்கு மேல் தங்க பல்லாக்கில் அம்மன் எழுந்தருளி உலா வந்தார். பின் மதியம் 12 மணிக்கு மேல் அம்மனுக்கு மஞ்சள் நீராடல், சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி சுவாமி நீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தல், கன்னி பெண்கள், பூரம் தொழுதல் ஆகியவை நடந்தது. இதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
நாளை ஆடித்தபசு : 11ம் திருவிழாவான நாளை ஆடித் தபசு யொட்டி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி தபசு மண்டகபடித்தில் எழுந்தருள்வர். மதியம் 2 மணிக்கு மேல் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கும். இரவு 9 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் தபசு மண்டகபடியில் எழுந்தருள்வார்.