யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 06:07
உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த நாளில் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு நவகலச திருமஞ்சனம், திரவிய அபிஷேகம், புஸ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் நாச்சியாரை தரிசித்தனர். ஆடிப்பூரம் திருவிழா உபயதாரராக இருந்து பழனிவேல்ராஜன், நிர்மலா குடும்பத்தினர் நடத்தினர். ஓம் நமோ நாராயணா பக்த சபையினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் என்பதால் பக்தர்கள் கொடுத்த வளையல்கள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டு வளையல அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார் கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவில் மகாளியம்மன், ஆதிபராசக்தி அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.