அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 10:07
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாக தோஷம் நீங்கவும் தங்களுடைய சந்ததிகளுக்கு நாக தோஷம் ஏற்படாமல் இருக்கவும் இந்த நாக பஞ்சமி வழிபாடு நடைபெறுகிறது. இன்றைய தினத்தில் நாகருக்கு பூஜை, அபிஷேகம் செய்வதால் பெண்கள் தங்கள் கணவர் மற்றும் சகோதரர்களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதையொட்டி கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் கும்ப கலசங்கள் வைத்து ரங்கோலியால் பிரம்மாண்டமான நாகர் கோலம் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.