Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அள்ளூர் கட்டுக்கரை முத்து ... கரந்தமலை கருப்பசாமி கோவிலில் 50 கிடாய்கள் வெட்டி ஆண்கள் மட்டும் வழிபாடு கரந்தமலை கருப்பசாமி கோவிலில் 50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிற்பம்
எழுத்தின் அளவு:
1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிற்பம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
05:07

விழுப்புரம்; திண்டிவனம் அருகே, 1300 ஆண்டுகள் பழமை யான ஐயனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே அன்னம்புத்துார் கிராமத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டபோது, பல்லவர் கால அய்யனார் சிற்பத்தை கண்டறிந்தனர்.


இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: அன்னம்புத்துார் ஏரிக்குள் சன்னியாசிமேடு பகுதி மீது, கருங்கல்லில் தனி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அதனை மக்கள் சன்னியாசி சாமி என்று வணங்கி வருகின்றனர். இந்த சிற்பத்துக்கு உரியவர் ஐயனார். பிரம்மாண்டமான தலை அலங்காரத்துடனும், இடைக்கச்சை அணிந்தும் காணப்படும் அவரது இடுப்பில் குறுவாள் இருக்கிறது. காதுகள், மார்பு, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன. வலது கையை முழங்கால் மீது வைத்தும், இடது கையை தொடை மீது வைத்தும், வலது காலை குத்திட்டும், இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். வழக்கமான ஐயனார் சிற்பங்களில் காணப்படும், துணைவியர்களான பூரணி, பொற்கலை மற்றும் அவரது வாகனம் உள்ளிட்ட எதுவும் இந்த சிற்பத்தில் காணப்படவில்லை. இது காலத்தால் முற்பட்ட சிற்பமாக இருக்கலாம். இதன் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட ஐயனார் சிற்பங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இக்கிராமத்தில், பல்லவர் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக பல்லவர் கால ஆவுடையார் ஒன்று இங்கு காணப்படுகிறது. மேலும், இதே காலத்தை சேர்ந்த கொற்றவை, விநாயகர் சிற்பங்கள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ள சிவாலயத்தில் வழிபாட்டில் இருக்கின்றன. சிவாலய வளாகத்தில் உள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் பிரம்மதேயமாக இருந்ததையும், அன்னப்புத்துார் எனும் பெயர் அப்போதே வழங்கப்பட்டதையும் தெரிந்து கொள்ளலாம்.  பல்லவர் காலத்திலும், அதனை தொடர்ந்து சோழர் காலத்திலும், அன்னம்புத்துார் கிராமம் சிறந்து விளங்கியதை இங்கிருக்கும் வரலாற்று தடயங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மாதவன், தெய்வநாயகம், இமயவரம்பன், ஞானசேகர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, சுந்தரகாந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar