வடவாயிற் செல்வி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2025 04:07
காஞ்சிபுரம்; உத்திரமேரூரில் உள்ள வடவாயிற் செல்வி துர்க்கை அம்மன் கோவிலில், 35வது ஆண்டு ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது. உத்திரமேரூரில் உள்ள வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் கோவிலில், கடந்த 27ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன், 35வது ஆண்டு ஆடி திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று காலை 10:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு மகாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள், துர்க்கையம்மன் வார வழிபாடு மன்றத்தினர், மகளிர் வார வழிபாடு மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.