திருவடானை; திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27 ல் தேரோட்டம் நடந்தது. ஜூலை 30 ல் திருக்கல்யாண விழா நடந்தது. நேற்று காலை சுந்தரர் கைலாயம் சென்ற நிகழ்வு நடந்தது.காலை 10:00 மணிக்கு சுந்தரர் வெள்ளை யானையில் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டார். ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடையுடனும், சிநேகவல்லி அம்மனுடன் அருள்பாலித்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருநொடித்தான் மலை என்ற பக்தி பாடல்களை பாடியபடி சுந்தரர் சிவனை நோக்கி சென்ற காட்சி நடந்தது. தீபாராதனை நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை காலை 10:00 மணிக்கு உற்ஸவ சாந்தியும் நடக்கிறது.