கோவை காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 10:08
கோவை ; டி பெருக்கை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ஹோமம் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் கிருஷ்ண வேத பாராயணம் நடைபெற்றது. இதில் 300 கும்ப கலசங்களுடன் காயத்ரி சுப்பிரமணிய கனபாடிகள் மற்றும் ராமகிருஷ்ணன் வேத பண்டிதர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க வேத பண்டிதர்கள் மந்திரங்களை பாராயணம் செய்தனர். இதில் 300 கும்ப கலசங்களுடன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.