செஞ்சி; கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெரிய விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு பொன்னியம்மன், மாரியம்மன் கோவில் ஆடி பெருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பொன்னியம்மன் மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு பூ பல்லக்கில் வாணவேடிக்கை, சிலம்பாட்டம், வாத்தியங்கள் முழங்க சரஸ்வதி தேவி அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கினர். அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த கிராம மக்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டிக்கான மளிகை பொருட்களை வழங்கினர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.