காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா; உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 03:08
கும்பகோணம் ; காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றை தாயாக பாவித்து அதற்கு நன்றி தெரிவிக்கும் நாள் ஆடி பெருக்கு தினம். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் முக்கிய விழாவாக விளங்குவது ஆடி 18 எனும் ஆடிப்பெருக்கு விழா. ஆடிப்பெருக்கு தினமான இன்று காவிரி வளத்தால் விளைந்த பொருட்களை ஆற்றங்கரைகளில் வைத்து அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டி உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வழிபாடு நடத்தினர். பெண்கள் தாலி கயிறு மற்றும் மஞ்சள் கயிறுகளை புதிதாக அணிந்து கொள்வதும் இன்றைய நாளின் சிறப்பாகும். கும்பகோணம் காவிரி படித்துறைக்கு வந்த புதிதாக திருமணமானவர்கள் இன்று காவிரி தாயை வழிபட்டதுடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற வேண்டி பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் கும்பகோணம் காவிரி ஆற்றின் டபீர் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடி வருகின்றனர்.