மதுராந்தகம் அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 05:08
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அய்யனார் நகரில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. மதுராந்தகம் அடுத்த அய்யனார் நகரில், அய்யனாரப்பன் கோவிலில், ஆடி மாத திருவிழா இன்று துவங்கியது. காலை 9.00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 1:30 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகமும், பகல் 2:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், இரவு 10:00 மணிக்கு தெய்வீக நாடகம் நடக்கிறது. மூலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.