Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி செவ்வாய்; முத்துமாரி அம்மன் ... மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா; அபிமன்யு தலைமையில் துவங்கியது கஜ பயணம்
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா; அபிமன்யு தலைமையில் துவங்கியது கஜ பயணம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2025
12:08

மைசூரு; மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, ஹூன்சூரில் இருந்து முதல் கட்டமாக ஒன்பது யானைகள் நேற்று மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


நடப்பாண்டு மைசூரு தசரா, செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை தசரா 11 நாட்கள் வருவதால், மாநில மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியில், 14 யானைகள் பங்கேற்கும் . இதில், முதல்கட்டமாக ‘அபிமன்யு’ தலைமையில் ஒன்பது யானைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த யானைகளை மைசூரு நகருக்கு வழியனுப்பும் விழா, ஹூன்சூரின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. இந்த முறைப்படி பூஜை செய்து, யானைகளின் பயணத்தை வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே துவக்கி வைத்தார்.


பின், அவர் பேசியதாவது: இயற்கை சூழலின் சமநிலைக்கு, வன விலங்குகள் அவசியம். அவற்றை பாதுகாக்க, நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். சமீபத்தில் மலை மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தில், புலியால் இறந்த பசுவின் இறைச்சி மீது, பசுவை இழந்தவர்கள், பூச்சிகொல்லி மருந்து தெளித்தனர். பசு இறைச்சியை சாப்பிட்ட தாய்ப்புலி மற்றும் அதன் நான்கு குட்டிகள் உயிரிழந்தன. இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வாழும் உரிமை உள்ளது. விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ள நாம், இரக்கமின்றி அவற்றை கொல்வதற்கு பதிலாக, அவற்றை பாதுகாக்க உறுதி எடுக்க வேண்டும். இயற்கை சூழலை பாதுகாப்பது நம் கடமை. வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்குடியினரின் பிரச்னைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதன்பின், யானை பிடிப்பு ந டவடிக்கைகள், யானைகளை அடக்குவது, வன விலங்குகளை பிடிப்பது ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட பீமா யானை, அதன் பாகன், உதவியாளருக்கு, தலா 10,000 ரூபாய் ரொக்க பரிசுடன் கூடிய, ‘அர்ஜுனா’ விருதை, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வழங்கினார். பட்டுக்கூடு வளர்ப்புத் துறை அமைச்சர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று துவங்கியது.திருமலையில், ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் ... மேலும்
 
temple news
கூடலூர்; கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில் ஆடி மாதத்தில் குடும்ப தோஷம் நீங்க , நடைபெற்ற ... மேலும்
 
temple news
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar