சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 01:08
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. வரும் 7ம் தேதி மாலையில் ஆடித்தபசு காட்சி நடக்கிறது.
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக தவம் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி சங்கர நாராயணராக காட்சியளிக்க கூடிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா ஜூலை 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி வரும் வரும் ஏழாம் தேதி மாலையில் நடைபெற உள்ளது.