கூடலூர் மகாவிஷ்ணு கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தோறும், குடும்ப தோஷம் நீங்க, பகவதி அம்மனுக்கு செவ்விளக்கு விலக்கு பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை கோவிலில் செவ்விளக்கு பூஜை நடந்தது. காலை, கோவிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு செவ்விளக்கு பூஜை நடைபெற்றது. பெண் பக்தர்கள், அரிசி, தேங்காய் எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். பூஜைக்கு பின், அரிசி தேங்காயுடன் கோவில் சார்பில் மஞ்சள், குறுமிளகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள், திரளாக பங்கேற்றனர். பக்தர்கள் கூறுகையில், ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை தோறும், செவ்விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்து வருகின்றனர். பூஜையில் பங்கேற்று, பூஜை செய்வதன் மூலம் குடும்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்றனர்.