கருமத்தம்பட்டி; கணியூர் பொன் காளியம்மன் கோவிலில், ஆடி மாத பொங்கல் விழா இன்று நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில் உள்ள பொன் காளியம்மன் மற்றும் அண்ணமார் சுவாமி கோவில் பழமையானது. இங்கு ஆடி செவ்வாய்கிழமையை ஒட்டி, பொங்கல் விழா நடந்தது. இன்று காலை பொன் காளியம்மனுக்கு, பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.