பெங்களூரு நியூ பாகலுார் லே – அவுட் ஸ்ரீநவதுர்கா தேவி கோவிலில் வரும் 11ல் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா, கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. வரும் 10ல் அம்மனுக்கும், விக்னேஷ்வரனுக்கும் பூஜை, புண்ணியாஹவசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ஸ்ரீமஹா கணபதி ஹோமம், லட்சுமி குபேர தன அக்ரோஸ்னா ஹோமம், ஸ்ரீநவக்கிரஹ ஹோமம், சோடச நாளிகேர தாடனம், மஹா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து, 11ல் இரண்டாம் கால யாகம் ஆரம்பமாகிறது. அன்று, பிம்ப சுத்தி ரக் ஷா பந்தன், ஸ்பர்ஷா ஹுதி, பூர்ணாஹுதி, யாத்ரா கிரக பிரித்தி, சுவாமி அம்மன் கலச புறப்பாடு; 9:15 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 10:15 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. வரும் 12ல் காலையில் அபிஷேகம், மஹா தீபாராதனை; 13ல் காலையில் அம்மனுக்கு அபிஷேகம், மாலையில் ருத்ரா பிரிகுவன்சியின் பக்தி பாடல்கள்; 14ல் காலையில் அபிஷேகம்; 15ல் காலையில் மாங்கல்ய பூஜை; 16ல் காலையில் தேர் ஊர்வலம்; 17ல் காலையில் அம்மனுக்கு திருக்கல்யாண உத்சவம்; மதியம் மஹா தீபாராதனை, கூழ் ஊற்றுதல், பிரசாத வினியோகம்; மாலையில் காப்புக் கழற்றுதல் நடக்கிறது.