Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் ஆக.9ல் ... நவதுர்கா தேவி கோவிலில் 11ல் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நவதுர்கா தேவி கோவிலில் 11ல் அஷ்டபந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித்தபசு என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
ஆடித்தபசு என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

07 ஆக
2025
11:08

சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை  தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும்  விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர். இதுகுறித்து அம்பிகையிடம் முறையிட்டனர். சிவனும், விஷ்ணுவும்  ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில், அன்னை பார்வதிதேவி பூலோகத்திலுள்ள புன்னை வனத்துக்கு வந்தாள். சிவனும், விஷ்ணுவும்  இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டி ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று கடும் தவம் செய்தாள்.  அவளது இந்த திருக்கோலம் காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து தங்கினர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும்  சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள். அம்பாளே பூமிக்கு வந்துவிட்டதால், அவளது திருமுகம் மதி  (நிலா) போல் பிரகாசித்தது. அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது.  இதன் காரணமாக அவளுக்கு கோமதி  என்ற பெயரும் தேவர்களால் சூட்டப் பட்டது. மதி என்றால் புத்தி என்றும் அர்த்தம். ஒரு ஊசியின் மேல் ஒற்றைக்காலில் நிற்க  வேண்டுமானால், எந்தளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும்! இப்படி புத்திசாலித்தனத்தில் கோ (தலைவி) ஆக இருந்ததாலும், இவள்  கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை தபஸ் என்று சொல்வர். இதுவே பேச்சுவழக்கில் தபசு, தவசு என்று மாறிவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழாவில் மத நல்லிணக்கத்தை ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துாரில் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar