கள்ளக்குறிச்சியில் ஆவணி அவிட்டம் பூணுால் அணியும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2025 03:08
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரேஸ்வரர் கோவிலில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிராமணர்கள் யஜூர் வேத சம்பிரதாயப்படி, இன்று காலை 8:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு மற்றும் கலச பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், காமாட்சி அம்மன் கோவில்களிலும், பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தியாகராஜபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராம லஷ்மி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வநாத கனபாடிகள் தலைமையில் சங்கல்பம், வித்யாரம்பம், வேதவியாச ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து பிராமணர்கள், புதிய பூணுாலை அணிந்து கொண்டனர். மகாதீபாராதனையை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பிராமணர்கள் கலந்துகொண்டனர்.