திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் இன்று 1008 வீதம் மூன்று கோயில்களிலும் 3024 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து விளக்கேற்றும் முன் பக்தி பாடல்களை பாடியபடி பெண்கள் விளக்கேற்றினர். இந்த பூஜையில் பெண்களுக்கு மங்கள பொருட்கள், ஆடைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.