லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு திருக்குடை காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2025 04:08
ஆர்.கே.பேட்டை; வங்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு, காணிக்கையாக திருக்குடைகள் வழங்கப்பட்டன. ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார் மற்றும் அஷ்ட லட்சுமியருக்கு தனித்தனியே சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலில் நித்திய பூஜைகள், தனுர் மாதம் மற்றும் புரட்டாசி உற்சவம் உள்ளிட்ட வைபங்கள் நடைபெற்று வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன் மாவட்ட சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, கோவிலின் உற்சவ மூர்த்திகள், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து பெருமாள் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு இரண்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கியுள்ளனர். இனிவரும் உற்சவங்களின் போது இந்த திருக்குடைகள், சுவாமி உலாவின் போது சேவைக்கு பயன்படுத்தப்படும்.