பழநி; பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினர் பூணூல் மற்றும் வைபவத்தில் ஈடுபட்டனர்.
பழநியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஹிந்து சமூக கலாச்சாரப்படி பல்வேறு சமூகத்தினர் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அதன்படி இன்று வீடுகள்,மடங்கள் கோயில்கள் ஆகியவற்றில் பூணூல் மாற்றிக் கொண்டனர். பழநி அர்ச்சகர் ஸ்தானிக சங்கத்தின் சார்பில் பிராமண சமுதாயத்தினர் தெற்கு ரத வீதியில் உள்ள சங்க கட்டிடத்திலும், தெற்கு ரத வீதியில் உள்ள வாசுகி மஹாலில் ஆரிய வைசிய சமுதாயத்தினர், பழநி டவுன் விஸ்வ பிராமண மகா ஜன சங்கத்தினர், ஆயிர வைசியர்கள் சமுதாயத்தின் சார்பிலும் பூணூல் மாற்றும் வைபோகம் நடைபெற்றது.