Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் ... செஞ்சி அருகே 1200 ஆண்டு பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு செஞ்சி அருகே 1200 ஆண்டு பழமை வாய்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நுால் வெளியீடு; தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நுால் வெளியீடு; தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2025
11:08

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91வது ஜெயந்தி விழாவையொட்டி, நுால் வெளியீடு மற்றும் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்க விழா காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது. சங்கரா கல்லுாரி தலைவர் சேது ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டை டில்லி பல்கலை இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் முன்னாள் தலைவர் கோவிந்தசாமி ராஜகோபால் துவக்கி வைத்து பேசினார்.


விழாவில், புலவர் மகாதேவன் எழுதிய ‘இமாலய சாதனையாளர்’ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நுாலை ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் அருணை பாலறாவாயன் பெற்றுக் கொண்டார். கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, கோவில் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர். விழாவில் ‘இமாலய சாதனையாளர்’ நுால் ஆசிரியர் புலவர் வே.மகாதேவன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, கனடா தென்னாசிய நுண்கலை கற்கை மைய தமிழ் துறை தலைவர் பாலசுந்தரம் இளையதம்பி மற்றும் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக தொடங்கிய ஆய்வு மாநாட்டில் மலேசியா, இலங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பலர் பங்கேற்று பேசினர். கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் ச.தெய்வசிகாமணி விழாவை தொகுத்து வழங்கினார்.


கலசாபிஷேகம் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடத்தப்பட்டு புனிதநீர் கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று ஆய்விருக்கை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் மாநாடு நிறைவு விழாவில், திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் காஞ்சி மடாதிபதி சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆன்லைன் மூலம் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி, தெய்வத்தமிழ் ஆய்விருக்கையை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார். ‘காஞ்சிபுரத்து கோவில்கள் 50’ என்ற நுாலை ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார். தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டு ஆய்வு கோவையை வெளியிட்டு சாஸ்தரா பல்கலை இயக்குனரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் வாழ்த்துரை வழங்குகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar