தஞ்சை பெரிய கோவிலில் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் தேசியக்கொடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 11:08
தஞ்சை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் நுழைவாயில் அருகே மூவர்ண விளக்குகளால் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு ரசித்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதன்முன் போட்டோ எடுத்து சென்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 79வது சுதந்திர தின விழாவை வரும் ஆகஸ்ட் 15 கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதிலும் விழாவை பிரமாண்டமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மீது மூவர்ண கொடி மின்னும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அதன்படி தமிழகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், திருமயம் கோட்டை , உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் இந்திய தொல்லியல் துறை திருச்சி கோட்டத்தின் சார்பில் வண்ண மின்விளக்கு மூலம் தேசியக்கொடி பிரம்மாண்டமாக ஒளிரூட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ நுழைவாயில் இடதுபுறம் மூவர்ண விளக்குகளால் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது, இதனை ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு புகைப்படமும் எடுத்துச் சென்றனர். மத்திய அரசின் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.