பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி; ஆடி உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 12:08
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஆக. 1 கொடியேற்றத்துடன் துவங்கி, நேற்று 10வது நாளில் காலை தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபம் முன்பு எழுந்தருள, தீர்த்த மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 12 வகையான நைவேத்தியங்கள் பூஜை செய்து தீபாராதனை நடந்து, மேள, தாளம் முழங்க பெருமாள் புறப்பாடாகினார்.மேலும் வேத பாராயணம், பாகவதர்கள் பக்தி இசை பாட, சிலம்பம், வாள் வீச்சு என பக்தர்கள் முன் செல்ல பெருமாள் திருவீதிகளில் சுற்றி கோயிலை அடைந்தார். இரவு சன்னதி கருடனுக்கு அபிஷேகம் நடந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.