காரமடை ஜெய மாருதி குரு ராகவேந்திரர் கோவிலில் 354ம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 04:08
காரமடை; காரமடை ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ குரு ராகவேந்திரர் திருக்கோவிலில் 354 ஆம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5:00 மங்கள இசை உடன் தொடங்கிய நிகழ்ச்சி சுப்ரபாதம் முடிந்து, பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அலங்கார பூஜையும் குரு ஸ்தோத்திர பாராயணம், மலர் அர்ச்சனை, மங்கள ஆரத்தி நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாச பலஞ்சிக மகாஜன திருப்பாவை வழிபாட்டு குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வைபவத்தை ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ ராகவேந்திரர் திருக்கோவிலில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.