இன்று தேய்பிறை சஷ்டி; விரதம் இருந்து வழிபட வேண்டியது அனைத்தையும் தருவான் வேலவன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2025 10:08
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். குழந்தைப்பேறு உண்டாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். இன்று சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..! முருகனை வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.. எதிர்பார்ப்பு யாவும் நடக்கும்.!