தெய்வகுற்றத்திற்கு ஆளாகிறோமோ இல்லையோ! நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுகிறோம். மறைந்த பெற்றோர், மூதாதையர் நம் நல்வாழ்வுக்காக எவ்வளவோ நல்லதைச் செய்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் நல்லதே செய்யவில்லை என்றாலும் கூட, அவர்கள் செய்த பாவத்திலிருந்து மீண்டு சொர்க்கம் அடைய பிதுர் வழிபாடு தேவை. காகத்திற்கு சோறு வைப்பது, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது போன்றவற்றை திதியன்று செய்யுங்கள். இல்லாவிட்டால் பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு.