பதிவு செய்த நாள்
14
ஆக
2025
03:08
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய சக்தி படைத்த உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 12, 2, 4ம் இடங்களுக்கு கிடைப்பதால் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை தாக்காது. நீண்டநாள் கனவுகள் நனவாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் ஜீவனாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஆக. 26 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியாளர்களுக்கு மதிப்புண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட முயற்சி இப்போது முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக.18,செப்.15
அதிர்ஷ்ட நாள்: ஆக.21, 27, 30,செப். 3, 9, 12.
பரிகாரம் குரு பகவானை வழிபட குறைகள் எல்லாம் தீரும்.
நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு ஆவணி முன்னேற்றமான மாதம். சுக ஸ்தானத்தில், அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து உங்கள் ராசியையும் தன் 10ம் பார்வை மூலம் நெருக்கடி தந்த சனிபகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உடல் பாதிப்பு விலகும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பகை நீங்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். விரய செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதியான உறக்கம், மனதில் சந்தோஷம் என்ற நிலை உண்டாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பத்தாம் இடத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மேலானவர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். நெருக்கடிகளை உண்டாக்கி வந்த கடன்களை அடைபடும் நிலை உண்டாகும். செப். 8 வரை அதிர்ஷ்டக்காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக.19,செப்.15,16
அதிர்ஷ்ட நாள்: ஆக.17,18,26,27,செப்.8,9
பரிகாரம் சனி பகவானை வழிபட வாழ்வில் இருந்த நெருக்கடி நீங்கும்.
வேகமாக செயல்பட்டு எண்ணியதை அடைந்து வரும் உங்களுக்கு ஆவணி மிக யோகமான மாதமாகும். ஆக.26 முதல் உங்கள் லாபாதிபதி புதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய ஏஜன்சி கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு, போட்டி என்ற நிலையெல்லாம் மாறும். ராஜ கிரகமான சூரியனும் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அரசு வழியில் சலுகை, அனுமதி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வர வேண்டிய பணம் வரும். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வாழ்வில் இந்த மாதம் வசந்த காலமாக இருக்கும். எதிர் வரும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பிறருக்கு உதவக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஆக.20, செப்.16.
அதிர்ஷ்ட நாள்: ஆக.18, 23, 27, செப். 5,9,14.
பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட நெருக்கடி நீங்கும்.