வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வாழும் உங்களுக்கு ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், கேதுவும் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் தடைகளும் தாமதமும் ஏற்படலாம். நீங்கள் நினைப்பதெல்லாம் உடனடியாக நடைபெற முடியாமல் போகலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். குடும்பம், உறவு, நட்பில் பிரச்னைகளை இல்லாமல் செய்வார். பணம், புகழ், அந்தஸ்து என்ற உங்கள் எண்ணத்திற்கெல்லாம் வழியமைப்பர். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வீட்டில் நவீன பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, பிரச்னை, பகை என்ற நிலையெல்லாம் மாறும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். இடம், வீடு என்று வாங்கக் கூடிய நிலை சிலருக்கு உருவாகும். பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 21
அதிர்ஷ்ட நாள்: ஆக.25,30,செப்.3,7,12,16
பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடங்கள் விலகும்.
பூராடம்
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உறுதியோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஆக.21 வரை எதிர்பாலினரால் சுக்கிரன் சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். மனதில் இருந்த குழப்பத்தை விலக்குவார். எந்த ஒன்றையும் தனித்து நின்று செய்யும் சக்தியை வழங்குவார். ஆக.25 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் விரும்பிய இடத்தை, வீட்டை வாங்கும் நிலை சிலருக்கு உருவாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அந்தஸ்து உயரும். முயற்சி ஸ்தானத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். சப்தம குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறும். உங்களை அவதுாறாக பேசியவர்களும், தாழ்வாக எண்ணியவர்களும் உங்களைப் பார்த்து அதிசயப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். இறை அருளும் பெரிய மனிதர்களின் ஆதரவும் உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் புதிய முதலீடு செய்வீர்கள். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். விவசாயம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் நிதானமாகவும் மேலதிகாரியின் ஆலோசனையின்படியும் செயல்பட்டால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஆக.22
அதிர்ஷ்ட நாள்: ஆக.21,24,30,செப்.3,6,12,15
பரிகாரம் ஆண்டாளை வழிபட நினைப்பது நடந்தேறும். நெருக்கடி நீங்கும்.
உத்திராடம் 1
நேர்வழியில் சென்று நியாயமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் உங்களுக்கு, ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஏதோ ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். அவசரத்திற்கும் பிறருடைய உதவியை கேட்பதற்கு தயங்குவீர்கள். இந்த மாதம் முழுவதும் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் உங்கள் நிலையில் சுபிட்சம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பிறரால் மதிக்கத்தக்க அளவிற்கு உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர்களின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். வேலைக்காக முயற்சித்து செய்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உறவினர்களுடன் இணக்கம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: ஆக.23.
அதிர்ஷ்ட நாள்: ஆக.19,21,28,30,செப்.1,3,10,12
பரிகாரம் சோமாஸ்கந்தரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை நடந்தேறும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »