மனம் சொல்வதை தெய்வ வாக்காக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு ஆவணி நன்மையான மாதமாகும். தைரியக்காரகன், ரத்தக்காரகன், யுத்தக்காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் எந்த விதமான நெருக்கடி வந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இதுவரை குடும்பம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். உங்கள் மனதில் நிம்மதியான நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தகுதியான வரன் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் ஏக்கம் தீரும். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். இதுவரை இருந்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தின் மீதும் வருமானத்தின் மீதும் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப்.12,13
அதிர்ஷ்ட நாள்: ஆக.18,24,27,செப்.6,9,15
பரிகாரம் பழநி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
சுவாதி
எந்த இடத்திலும் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காத உங்களுக்கு ஆவணி லாபமான மாதமாகும். பூர்வ புண்ணிய புத்தி ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும் பாக்கிய குருவின் பார்வை 5 ம் இடத்திற்கு கிடைப்பதால் உங்களின் நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவுகளுடன் இணக்கம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உங்கள் லாபாதிபதியும் கேதுவும் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். வர வேண்டிய பணம் வரும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். இழுபடியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆக. 21 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உதவி எனக் கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்வீர்கள். செப்.11 வரை உங்கள் பாக்கியாதிபதி புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். முன்னோரின் ஆசியும், பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். எந்த ஒன்றும் நடைபெறவில்லையே என இத்தனை நாளும் ஏங்கிக் கொண்டிருந்த நிலை மாறும். உங்கள் வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய முயற்சிகள் லாபம் தரும்.
நல்ல எண்ணம் கொண்டவரான உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்ட மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் மங்களகாரகன் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். இணக்கமான நிலை ஏற்படும். கடன் தொல்லை விலகும். ஜென்ம ராசிக்கும் 3, 5 ம் இடங்களுக்கும் குரு பார்வை உண்டாவதால் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வர். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் நிம்மதி ஏற்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு இனிப்பான தகவல் கிடைக்கும். லாப ஸ்தான சூரியனும், கேதுவும் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவர். வேலையில்லாதவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. அதிகமான அலைச்சலும் உழைப்பும் பாதிப்பை ஏற்படுத்தும். மாதம் முழுவதும் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். சாதுரியமாக செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.
சந்திராஷ்டமம்: ஆக.18,செப்.14
அதிர்ஷ்ட நாள்: ஆக.21,24,30,செப்.3,6,12,15
பரிகாரம் மருதமலை முருகனை வழிபட மனக்கவலை மறையும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »